Niroshini / 2016 ஜூலை 16 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
பொகவந்தலாவ பிரதேச மக்களுக்கான தொற்றாத நோய் தொடர்பிலான பரிசோதனை செயற்றிட்டம் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்தின் வழிகாட்டலில் பொகவந்தலாவ சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் வைத்தியர் ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இச்செயற்றிட்டத்தில், மக்கள் சுகாதார அதிகாரி பீ.கே.வசந்த உட்பட வைத்திய அதிகாரிகளின் ஊடாக இருதய நோய், சிறுநீரக நோய், இரத்தம் சம்பந்தமான நோய்கள் போன்ற பல்வேறு நோய்கள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொடிய நோய்கள் தொடர்பில் இனம்காணும் பட்சத்தில், மேலதிக சிகிச்சைக்காக விசேட வைத்திய நிபுணர்களிடம் அனுப்பி சிகிச்சையளிக்க உள்ளதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago