2021 மே 06, வியாழக்கிழமை

தீ விபத்து; ஒருவர் காயம்: கார்கள் தீக்கிரை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கண்டி, ஸ்ரீ விக்ரமராஜசிங்க வீதியிலுள்ள கராஜில் நேற்று(1) பகல், ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் திருத்தப்பணிகளுக்காக கொண்டுவரப்பட்டிருந்த இரண்டு கார்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊழியர் ஒருவர் காரில் இரும்பு ஒட்டும்  (வேல்டீங்) போது தீ  பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்துக் காரணமாக குறித்த கடைக்கு அருகிலிருந்த கெப்பட்டிபொல சிங்கள மகா வித்தியாலய மாணவர்களுக்கும் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.   

கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .