2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

‘நாட்டின் காலாசரம் நசுங்கிவிட்டது’

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிலுள்ள அனைத்து துறவிகளும் கூலிப்படையினர் என, நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை சிங்கள, பௌத்த நாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.

வெலிமடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில், அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தை எதிர்த்து, அமைச்சர் மங்கள சமரவீர ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்பதை அவர் கூறினார்.

இந்த அரசாங்கம்தான், இலங்கையின் பூர்வீக கலாசார, மதிப்புகளை அழித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவர், வெளிநாடுகளில் காணப்படும் ஓரினச் சேர்க்கையைக் கூட, இந்நாட்டுக்குள் கொண்டு வர முனைந்ததாகவும் எனவே, நாட்டை சரியான திசையை நோக்கி கொண்டுசெல்லவேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .