Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Gavitha / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
நாடளாவிய ரீதியில், 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்குக் கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
“உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், மாணவர்களிடையே விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, நாடளாவிய ரீதியில், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3,850ஐ நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல், எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வெளியிடப்படும். அதன்பின்னர், இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணபிப்போர், 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். க.பொ.த சா/த பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்திப்பெற்றிருப்பது அவசியமானதாகும். அத்துடன் ஏதேனும் ஒரு விளையாட்டுப்போட்டியில், மாகாண, தேசிய, சர்வதேச சான்றிதழ்ளைப் பெற்றிருப்பதும் அவசியமானதாகும். இத்தகைமைகளைக் கொண்டிருப்போர், பயிற்றுவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்” என்றார்.
அத்துடன், பதுளையிலுள்ள தேசிய கல்வியற் கல்லூரியானது, விளையாட்டுக்கல்லூரியாக மாற்றப்படவுள்ளது. மேற்படி பதவிகளுக்காக தெரிவுசெய்யப்படும் 3,850 பேருக்கும், இக்கல்வியியற் கல்லூரியிலேயே பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு பாடசாலைக்கும் இருவர் என்ற ரீதியில் நியமிக்கப்படுவர். இவர்கள் காலை, மாலை என இரு வேளைகளில், கடமையில் அமர்த்தப்படுவர். இவர்களுக்கு, ரூ.30 ஆயிரம் வரை கொடுப்பனவுகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அத்துடன், “2017ஆம் ஆண்டு, தமிழ்ப் பாடசாலைகளில் யோகா பயிற்சியையும் பாடத்திட்டத்துக்குள் உள்வாங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள், கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .