Kogilavani / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்துக்;கு 25 நாட்களுக்கான வேலையை, உறுதி செய்யுமாறு மலையக தொழிலாளர் முன்னணியின் மாநில நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.வரதராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
'மஸ்கெலியா பிளான்;டேசன் நிர்வாகத்துக்;கு உட்பட்ட சென்கிளையர், ட்றூப் தோட்டங்களில் வாரத்துக்;கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் வெள்ளி, சனிக்கிழமைகளில் வேலை வழங்கப்படுவதில்லை எனவும் தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
ஆனால், தொழிலாளர்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை நாட்களிலும் வேலை வழங்கும் வகையில், அவ்வவ் தோட்டங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன என்று தொழிலாளர்கள் முறையிட்டதற்கு இணங்க, இதனை கம்பனி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
தேயிலை மலைகளில் கொழுந்து அதிகமாக வளர்ந்துள்ளது. இதேவேளை, மலைகளில் அதிகளவான புற்களும் வளர்ந்துள்ள நிலையில், மேற்படி தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதற்கு நிர்வாகம் ஏன் தயங்குகின்றது.
கூட்டொப்பந்த சரத்தின்படி நிர்வாகங்கள், மாதத்துக்;கு 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால், வேலை வழங்க கூடிய நாட்களிலும் வேலை வழங்காமலிருப்பது திட்டமிட்ட செயலே ஆகும்.
இது தொடர்பாக தலவாக்கலை, சென்கிளையார் தோட்ட முகாமையாளருக்கும் ட்றூப் தோட்ட முகாமையாளருக்கும் ஹட்டன் உதவி தொழில் ஆணையாளருக்கும் பிரதிகள் இட்டு கடிதம் எழுதியிருக்கின்றேன்.
எனவே, மேற்படி விடயங்களை ஆட்சேபித்து, தொழிலாளர்கள் தொழிற்;சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதால் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு, இங்குள்ள தொழிலாளர்களுக்கு போதிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்' என்றார்.
20 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
8 hours ago