2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

பசறை வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றம்; அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலர்வேந்தன்

பசறை வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றமான நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக, அங்கிருந்துக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதுளை - பசறை, மடுல்சீமை பிரதான வீதியின் 6ஆம் கட்டைப்பகுதியில், நேற்று (06) இடம்பெற்ற பஸ் விபத்தில், 8 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள், பசறை, பதுளை ஆகிய  வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் உறவினர்கள், பசறை வைத்தியசாலை வளாகத்தைச் சூழந்துள்ளனர் என்றும் விபத்தில் காயமடைந்தவர்களை  பார்வையிடுவதற்காக வருகைத்தரும் பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், விபத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கோரியுள்ளதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .