2021 ஜனவரி 27, புதன்கிழமை

’புதிய அரசாங்கத்தில் அபிவிருத்திகள் துரிதமாகும்’

ஆ.ரமேஸ்   / 2019 நவம்பர் 19 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன், இ.தொ.காவுக்குக் கீழ் இயங்கும் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடான பிரதேச அபிவிருத்திகள் அனைத்தும், விருத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதாக, நுவரெலியா மாநகர சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிவன்ஜோதி யோகராஜா தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி​ பெறுவதற்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், நுவரெலியாவிலுள்ள இ.தொ.காவின் காரியாலயத்தில், இன்று (19), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய ஆட்சி அமைக்கப்பட்டவுடன், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் பின்தங்கிக் காணப்படும் சகல உட்கட்டமைப்பு அபிவிருத்திகளையும் விரைவாக முன்னெடுக்கும் வாய்ப்பு, இ.தொ.காவின் உறுப்பினர்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராகத் தெரிவு செய்யப்படுவார் என்றும் இதன்மூலம், கடந்த காலங்களாக தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்திப் பணிகளும் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .