Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ - ஹட்டன் பிரதான வீதியில், பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று, 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பலாங்கொடை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற லொறியே, இன்று (24) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது என, பொகவந்தலாவ போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதிக்கு குறுக்காக, பன்றிக்கூட்டம் சென்றதையடுத்து, அவற்றுக்கு இடம்கொடுக்க முயன்றபோதே, லொறி கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் பாய்ந்துள்ளது என்றும் எனினும் லொறியின் சாரதிக்கும் உதவியாளருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், லொறியில் இருந்து மரக்கறிகள் அனைத்தும் நாசமாகிவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

25 Apr 2026
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Apr 2026
25 Apr 2026