2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பன்றி குறுக்கிட்டமையால் விபத்து: இளைஞன் காயம்

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நோட்டன் பிரதான பாதையின் சமர்வில் நேற்று வெள்ளிக்கிழமை (18) இரவு 8 மணியளவில் இளைஞன் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வத்துகொண்டிருந்த வேளை, திடீரென பாதையின் குறுக்கே பன்றி வந்தமையால் வேகக்கட்டுபாட்டை இழந்து மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானது. 

ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கிளவட்டன் தோட்டத்தைச் சேர்நத  சதீஸ்குமார் என்ற இளைஞனே காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

பிரதேசவாசிகள், காயமுற்ற இளைஞனை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் மேலதிக சிகிச்சைக்கான கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .