2021 மே 06, வியாழக்கிழமை

பயிர் செய்கையை பாதுகாக்க மின்சாரம் பெற்றவர் கைது

Princiya Dixci   / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பிரதான மின் இணைப்பில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றிருந்த சந்தேகநபரொருவரை, அலவத்துகொடை பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கைது செய்துள்ளனர்.
 
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்தை சோதனையிட்ட போது, அலவத்துகொடை - பூஜாபிட்டிய வீதியில் ஹதிரம எனுமிடத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது, மரவள்ளிச் செய்கைத் தோட்டத்துக்கு மிருகங்களினால் ஏற்படும் அழிவை நிறுத்தும் நோக்கத்துடனேயே இவர் இவ்வாறு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, கண்டி நீதவான் முன்னிலையில் நாளை புதன்கிழமை (18) ஆஜர்படுத்தவுள்ளதாக அலவத்துகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .