2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

பருவகாலம் ஆரம்பிக்கப்பட்ட 1 மாதத்தில் 150 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

2019-2020ஆம் ஆண்டுக்குரிய சிவ​னொளிபாத மலை பருவகால யாத்திரை ஆரம்பித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், போதைப்பொருள்களுடன் சிவனொளிபாதமலை வருகைத் தந்த 150 இளைஞர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சூலனி வீரரத்ன தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஐஸ், கேரளா கஞ்சா, சட்டவிரோத சிகரெட்டுகள், போதை மாத்திரைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களுள் 110 பேர் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டதால் அவர்களிடம் அபராதப் பணம் அறவிடப்பட்டு அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய 40 சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக இம்மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் சட்டநடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் பொலிஸ் ஊழல் மோசடி ஒழிப்புப் பிரிவு, ஹட்டன் பொலிஸ், நல்லதண்ணி பொலிஸ், மஸ்கெலியா ​பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--