2021 மார்ச் 03, புதன்கிழமை

போலி சுகாதார பரிசோதகருக்கு வலைவீச்சு

Kogilavani   / 2017 ஜூலை 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மு.இராமச்சந்திரன்

ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, தன்னை சுகாதாரப் பரிசோதகர் மற்றும் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் பணம் பறிக்க முற்பட்ட நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஹட்டன் நகரிலிலுள்ள ஹோட்டல் மற்றும் பலசரக்குக் கடை என்பவற்றுக்குச் சென்ற நபரொருவர், தன்னை நுவரெலியா மாவட்ட விலைக் கட்டுப்பாட்டு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்களில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும் எனவே, வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   

வழக்குத் தாக்கல் செய்தால் 25,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென்று கூறிய அந்நபர்,  வழக்குத் தாக்கல் செய்யாமலிருக்க வேண்டுமெனில், பணம் தருமாறும் வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் கோரியுள்ளார்.   

இந்நிலையில், பலசரக்குக் கடையின்  உரிமையாளர், சுகாதார பரிசோதகரிடம் அடையாள அட்டையைக் கோட்டபோது, அந்நபர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.   

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கும் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலையங்களுக்கு வருகைதந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேற்படி நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .