Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 25 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணிஸ்ரீ
கேகாலை மாவட்டம்; இரம்புக்கனை, பின்னவல பிரதேசத்தில், ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கென சப்ரகமுவ மாகாண சபை 1,690 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை(23) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
சகல வளங்களையும் கொண்டு பின்னவல பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள மேற்படி ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலையில் வழங்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் சிறந்த முறையில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சப்ரகமுவ மாகாண உல்லாசத்துறை அமைச்சின் மூலம் 2010ஆம் ஆண்டு இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலை, சிறந்த முறையில் இயங்கி வருவதோடு வருடத்துக்கு அப்பாடசாலையிலிருந்து பயிற்சிகளை நிறைவு செய்த 200 இளைஞர்,யுவதிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஹோட்டல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
39 minute ago
52 minute ago