2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

போலி சுகாதார பரிசோதகர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 27 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

சுதந்திர  போராட்டங்களில் முக்கிய இடம் வகிக்கும், ஊவா- வெல்லஸ்ஸ போராட்டத்தை நினைவுகூரும் வகையில், பிபிலை, உனகொல்ல விகாரைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியானது, மரண அறிவித்தல்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டும் இடமாக மாறியிருப்பதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வரலாற்றை நினைவுகூரும் வகையில், எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பித்தளை தகடொன்றும் இத்தூபியில் வைக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த பித்தளையிலான பகுதியை, விஷமிகள் திருடிச் சென்றுள்ளதாகவும் தற்போது, இந்நினைவுக்கல்லானது பராமரிப்பின்றி காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் இந்நினைவுத் தூபி, முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என,பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--