2021 மே 08, சனிக்கிழமை

மண்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

Administrator   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஷ்

கொத்மலை, வெதமுல்ல கையிறுக்கட்டித் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை(25) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபாயை, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது,  

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் திசரக்குமார, அமைச்சின் கொத்மலை பிரதேச இணைப்பாளர் ஜெயரட்ண ஹேவகே  ஊடாக கையிறுக்கட்டியில் வைத்து பணம் உரியவர்களுக்கு கையளிக்கப்பட்டது. இலங்கை நெஞ்சுலுவை சங்கத்தின் நுவரெலியா கிளையின் நிறைவேற்று அதிகாரி ஆர்.எஸ்.சந்ரசிறி தலைமையில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும்  குழந்தைகளுக்கான  உணவுப்பொருட்கள், உணவு, உடை என்பனவும் இதன்போது கையளிக்கப்பட்டன.

இம்மண்சரிவு, காரணமாக  3 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, 45  குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X