2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

மத்தியில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

Kogilavani   / 2017 மே 29 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்ப்பார்க்க முடியும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்நிலையில், மத்திய மலைநாட்டின் மேற்குச் சாய்வுப் பிரதேசங்களில், நேற்றுக் காலை, கடும் காற்றுடன்கூடிய வானிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது. சில பிரதேசங்களில் பனிப்பொழிவு அதிகரித்திருந்ததுடன் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே, வாகனங்களை செலுத்தியுள்ளனர்.

கடுங்காற்றுக் காரணமாக பல பிரதேசங்களின் பிரதான வீதிகளில், மரங்கள் முறிந்துவிழுந்ததுடன், போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. அடிக்கடி மின்சார விநியோகம் தடைப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சில பிரதேசங்களில் மழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .