2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மாத்தளை நகரசபை தலைவருக்கு அச்சுறுத்தல்

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஷ் கீர்த்திரதன்

மாத்தளை நகரசபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிடுவோம் என்றுத் தெரிவித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாநகர சபையின் எதிரக் கட்சி உறுப்பினர்கள், அவர்களது ஆதரவாளர்கள் அச்சுறுத்தல் விடுத்தனர் என்று, நகரசபையின் தலைவர் டல்ஜின் நந்தலால் அலுவிஹார, மாத்தளை பொலிஸில், நேற்று (24) முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வாரம் மாத்தளை மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, இவ்வாறு தான் அச்சுறுத்தப்பட்டதாக, அவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ.பொ.பெரமுனவின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தும் கானொளி அடங்கிய வீடியோவையும், வசந்த அலுவிஹார பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,   எதிர்காலத்தில் மாத்தளையில் முன்னெடுக்கவுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களுக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கி செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .