2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

’மாத்தளை மாவட்டம் புறக்கணிக்கப்படுகின்றது’

மொஹொமட் ஆஸிக்   / 2017 மே 24 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பெருந்தோட்ட மக்களின் பிரச்சினை என்று வந்தால், அதில் நுவரெலியா மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டுமே கருத்திற்கொள்ளப்படுகின்றது. மலையகத்தை உள்ளடக்கிய ஏனைய மாவட்டங்களின் பிரச்சினைகள் கவனத்தில்கொள்ளப்படுவதில்லை. இது ஆரோக்கியமான நிலை அல்ல' என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.இப்ராகிம் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறிய அவர்,

'அனைத்து விடயங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்துக்கே முன்னுரிமையளிக்கப்படுகின்றது. நான், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவன். மாத்தளை மாவட்டமும் முற்றுமுழுதாக பெருந்தோட்டங்களால் சூழப்பட்டது. மாத்தளை மாவட்ட மக்களும் பெருந்தோட்ட மக்களே.

இம்மக்களின் பிரச்சினைகளும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .