Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 28 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
மலையகத்தில் அறநெறிக் கல்வியை விஸ்தரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மலையக புதிய கிராமங்கள், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
'மலையகம் தழுவிய ரீதியில் அறநெறி கல்வியை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருகிறேன்' என்றும் அவர் கூறினார்.
வட்டவளை, ரொசல்ல தோட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட அறநெறி பாடசாலை கடடடத்துக்கான திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'மலையக சமூகத்தின் எதிர்காலத்தை, வளமானதாக மாற்றியமைக்க மாணவர் மத்தியில் கல்வி , சமயம் மற்றும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்த வேண்டும். திறப்பு விழா கண்ட ரொசல்லை அறநெறி பாடசாலையானது மாணவர்வர்களிடத்தில் சிறந்து சமய அறிவை ஏற்படுத்த வேண்டும். அதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
3 hours ago
4 hours ago