2021 ஜனவரி 27, புதன்கிழமை

மஹ்தூன் ஹாஜியார் காரியாலம் புனரமைப்பு

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை இ/ ஜெய்லானி தேசிய பாடசாலையின் மஹ்தூன் ஹாஜியார் காரியாலயக் கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டு, பாடசாலையின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகரும் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைவருமான அல்ஹாஜ் எம்.ஜே.எம்.மஹ்தான் ஹாஜியாரால், 1983ஆம் ஆண்டு இந்தக் காரியாலயக் கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டு பாடசாலையின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

36 வருடங்களின் பின்னர், மீண்டும் இக்கட்டத் தொகுதி புனரமைப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.றிஷாதினின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக சேவை பிரமுகர் இளம் வர்த்தகர் எம்.ஐ.எம்.பஸ்மி, ஸ்தாபகர் மஹ்தூன் ஹாஜியார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .