2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மோதலில் ஒருவர் பலி: பெண் உட்பட அறுவர் படுகாயம்

Kogilavani   / 2016 ஜூலை 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

ஹங்குரங்கெத்த ஹேவாஹெட்ட துல்கந்துர பிரதேசத்தில்  இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், மாரிமுத்து (வயது 57) என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில், ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் துல்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்தரே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த அறுவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கால்வாயில் குப்பையை எறிவது தொடர்பில் இரு குடும்பங்களுக்கு இடையில் இருந்துவந்த நீண்டகால முரண்பாடே, மேற்படி சம்பவத்துக்கு காரணமென ஹங்குரங்கெத்த பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .