2021 ஜனவரி 23, சனிக்கிழமை

முன்னாள் புலிக்கு சரீரப்பிணை

Kogilavani   / 2016 ஜூலை 08 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பசறை, மூன்றாம் கடைப் பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைதான, முல்லைத்தீவைச் சேர்ந்த செபஸ்டியன்பிள்ளை என்ற இளைஞனை, பதுளை நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரசிங்க,  2 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவித்து, நேற்று (7) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருந்த மேற்படி இளைஞன், புனர்வாழ்வளிப்பின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்.

இவர், பசறை 3ஆம் கட்டையில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த அயலவர்கள், இவ்விளைஞனால் தமக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்படி இளைஞனை, திங்கட்கிழமை (4) கைது செய்த பொலிஸார், அவரை நேற்று (7) நீதிமன்றில் ஆஜர்படுத்தியப்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட மாதம் 2ஆம் திகதியன்று மீண்டும் ஆஜராகுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட நபர் தொடர்பிலான புலனாய்வு அறிக்கையை  நீதிமன்றில் சமர்பிக்கும்படியும் பதுளைப் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .