2021 மே 12, புதன்கிழமை

மென்பானம் அருந்திய எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.செல்வராஜா

ஆசிரியர் தின நிகழ்வின்போது பகிர்ந்தளிக்கப்பட்ட மென்பானத்தை அருந்திய எட்டு மாணவர்கள், திடீர் சுகயீனமுற்ற நிலையில் வெலிமடை வைத்தியசாலையில் இன்று (8) அனுமதிக்கப்பட்டனர்.

வெலிமடை  விஜய வித்தியாலயத்தில் தரம் 4 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மென்பானத்தை அருந்திய இவர்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலாவதியாகிய மென்பானத்தை இவர்கள் அருந்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .