2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மூவருக்கு மரண தண்டனை

Administrator   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதி சம்பத் பண்டார, நேற்று வெள்ளிக்கிழமை(28) வழங்கியுள்ளார்.

வெலிமடை -போஹகும்புர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்குபேர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக குறித்த மூன்று நபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

1990ஆம் ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் வெலிமடை- போஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .