Editorial / 2020 ஜனவரி 08 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட தமிழ் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களிடையே, ஆளுமை விருத்தியையும் சமய, கலாசார ஒழுக்க விழுமியங்களையும் மேம்படுத்தும் நோக்கில், யோகா வதிவிட பயிற்சி முகமொன்று, பசறை - கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 10,11,12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், ஜீவயோகாஸ்தாபனம், பசறை - கோணகலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், இந்த முகாம் நடைபெறவுள்ளது.
வித்தியாலயத்தின் அதிபர் எஸ். நவரட்ணராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்த வதிவிட முகாமில், கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா மகராஜ் கலந்துகொள்ளவுள்ளார்.
பயிற்சி முகாமில், சூரிய நமஸ்காரம், யோகாசனப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம், பஜனை, ஆன்மீக உரை, வலது மூளைப் பயிற்சி, மரம் நடுகை நிகழ்வு, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட விடயங்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளன.
26 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago