2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

யட்டியந்தொட்ட விவகாரம்: சுமூகமாகத் தீர்வு

பா.திருஞானம்   / 2019 நவம்பர் 19 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியந்தொட்ட  கனேபொல தோட்டத்தில், நேற்று (18) இரவு ஏற்பட்ட இன முறுகல் சம்பவம், யட்டியாந்தோட்டை பொலிஸார்  தலைமையில், சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (18) இரவு, வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, அங்குள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, வீட்டிலிருந்து தொலைச்காட்சிப் பெட்டி, மின் விசிறி ஆகியவற்றை கீழே போட்டு உடைத்து, அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த யட்டியாந்தோட்டை பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்த பின்னர், அங்கு ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், இதற்குக் காரணமான ஒருவரையும் கைது செய்தனர்.

எனினும், குறித்தத் தோட்டத்திலுள்ள மக்கள், மீண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று அச்சத்துடன் இருந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தாரை, பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இரு தரப்பினருக்கு இடையேயான பிரச்சினையை, சுமூகமாகத் தீத்து வைத்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட நபருக்கு, தொலைக்காட்சி, மின்விசி உள்ளிட்ட நட்ட ஈடு பணத்​தொகையும் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .