2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வடிகான்கள் சுத்திகரிப்பின்மையால் வர்த்தகர்கள் அவதி

Yuganthini   / 2017 ஜூலை 16 , பி.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்   
நுவரெலியா- கந்தப்பளை நகரிலுள்ள வடிகான்கள், நீண்டகாலமாக சுத்திகரிக்கப்படாமையால், பாரிய சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக, நகர வர்த்தகர்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.   

வடிகான்களை சுத்திகரிப்பதில், நுவரெலியா பிரதேச சபையின் கந்தப்பளை உப-காரியாலயம் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும், அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நகரிலுள்ள வடிகான்கள், பல மாதங்களாக சுத்திகரிக்கப்படாமையால், வடிகான்களுக்குள் அடைப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், அசுத்த நீரும் வெளியேற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வடிகான்களுக்குள் கழிவுகள் தேங்கியுள்ளதுடன், துர்நாற்றமும் வீசிவருகின்றது.   இதனால், நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக, நகர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

எனவே, வடிகானைச் சுத்திகரிப்பதற்கான நடவடிக்கைகளை, நுவரெலியா பிரதேச சபையின் கந்தப்பளை உப-காரியாலம் மிகவிரைவில் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .