Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ்கீர்த்தி ரத்ன
இறத்தொட்டை - மாத்தளை வீதி, அம்பக்ஸ்தென்ன பிரதேசத்தில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டில், அம்பன்கங்ககோரளயே பிரதேச செயலாளரை, பொலிஸார் நேற்று (01) கைதுசெய்துள்ளனர்.
அவர் செலுத்திச்சென்ற உத்தியோகப்பூர்வ வாகனமானது, மேற்படிப் பகுதியில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இறத்தொட்டையிலிருந்து மாத்தளை நோக்கிச் செல்லும்போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. அவரது வாகனமானது, குடைசாய்ந்து வீதியின் ஓரத்திலிருந்த வீடொன்றின் மீதுமோதியதில், குறித்த வீட்டுக்கு அருகிலிருந்தவர் காயமடைந்துள்ளார் என்றும் அவரது நிலைமைக் கவலைக்கிடாக இருப்பாத வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேச செயலாளரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago