2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு தடை

Freelancer   / 2025 ஒக்டோபர் 25 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
 
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
 
இந்தப் போரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
 
இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்தது.
 
இதற்கிடையே, ரஷ்யாவிற்கு பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் இந்தத் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்து வருகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X