2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு

Editorial   / 2025 ஒக்டோபர் 25 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ் களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு - மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அதிக மழையின் காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இரத்தினபுரி களுகங்கையின் நீர்மட்டம் நேற்றையதினத்தைவிட இன்றையதினம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ள நிலைமைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், களு கங்கை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் இது தொடர்பாக அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X