2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில்

Freelancer   / 2025 ஒக்டோபர் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரஜரட்ட குயின் ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு வேறு ஒரு என்ஜின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்தது. 

இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. 

இதன் காரணமாக, அந்த ரயில் புறப்படுவது 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமானதுடன், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X