2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விபத்தால் கடை சேதம்

பாலித ஆரியவன்ச   / 2017 ஜூலை 24 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை-மஹியங்கனை வீதி, துன்ஹிந்த வளைவிலுள்ள கடையொன்றில் மோதி, டிப்பர் ரக வாகனமொன்று நேற்றுக் காலை விபத்துக்குள்ளானதில், அந்தக் கடை முற்றுமுழுதாக சேதமாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இவ்விபத்தால் உயிராபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர், தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதாகவும் கூறினர்.

மேற்படி பகுதியில், அடிக்கடி விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவித்த பொலிஸார், வாகன சாரதிகள் கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்துவதாலேயே இவ்விபத்து இடம்பெறுவதாகவும் கூறினர்.

இப்பகுதியில் கடந்தசில வாரங்களுக்குள் ஐந்து விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .