2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விவசாய நிவாரணங்கள் கிடைப்பதில்லை எனக் குற்றச்சாட்டு

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

 

இயற்கை அனர்த்ததால் பாதிப்புகள் ஏற்படும் போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள், பெருந்தோட்ட மக்களுக்குக் கிடைப்பதில்லை என, இலங்கை விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாநகர சபை உறுப்பினருமான டீ.மாதவன் தெரிவித்துள்ளார்

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை ஒரு விவசாய நாடு என்பதை அனைவரும் அறிந்திருந்தப் போதிலும் நெல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்களும் வரட்சி நிவாரணங்களும் அதேபோல் வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படும்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்களும் மானியங்களும் நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நெல்லுக்கு வழங்கப்படும் உதவிகளைப் போன்று, மரக்கறி விவசாயத்துக்கு நிவாரணங்களும் மானியங்களும் வழங்கப்பபட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

நுவரெலியா மாவட்டத்தில், நூற்றுக்கு தொண்ணூரு சதவீதமான மக்கள், மரக்கறி உற்பத்தியை நம்பியே தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அண்மை காலமாக வரட்சியின் தாக்கத்தாலும் தொடர் மழையாலும், மிகவும் பாரதூரமான இழப்புகளால் தொடர்ந்து விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் கைவிடப்பட்ட நிலையின் காரணமாக இம்மாவட்ட மரக்கறி உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு விவசாயிகளும் பங்குதாரர்கள் இப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலன் கருதி அரசாங்கம் இவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க முன்வரவேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .