Editorial / 2025 ஒக்டோபர் 26 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ஆகியோரை சனிக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுலிகாடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பாடசாலை உள்ளது. இந்த பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரிடம் சனிக்கிழமை அந்த பாடசாலையில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியர் பாலியல் சீண்டல் செய்த நிலையில், அந்த மாணவி வீட்டுக்கு சென்றவுடன் இதுபற்றி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு போன் மூலம் புகார் தெரிவித்துவிட்டு, பாடசாலை முன்பு மற்ற பாடசாலை மாணவ மாணவிகளுடன் அவரவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினரையும் பெற்றோர்கள் முற்றுகையிட்டு அவர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்த பகுதியில் நீண்ட நேரமாக பதட்டமான சூழ்நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரை நீண்ட நேரத்துக்குப் பிறகு அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆசிரியரை பொலிஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செய்தி, பாடசாலை தலைமை ஆசிரியைக்கு தெரிந்திருந்தும் அதை அவர் மறைத்ததாக பாடசாலையின் தலைமை ஆசிரியையும் பொலிஸார் கைது செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .