2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

வியாபார நிலையத்தில் கொள்ளை

Yuganthini   / 2017 மே 21 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுஜிதா

தலவாக்கலை, மிடில்டன் கடைத் தொகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்று, சனிக்கிழமை (20) இரவு, கொள்ளையிடப்பட்டுள்ளது.

அங்கிருந்த  2 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் வியாபார நிலையத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் சில்லு ஒன்றும் களவாடப்பட்டுள்ளதாகவும், அவ்வியாபார நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

பல சரக்கு கடை ஒன்றே இவ்வாறு கொள்ளையிடப்பட்டு, அங்கிருந்த அலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், டெனிஸ் பத்துகள், சிகரெட், ஐஸ்கிரீம், கையடக்கத் தொலைபேசி, சில்லறை காசு என்பன களவாடப்பட்டுள்ளன என்று, உரிமையாளரால், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், தலவாக்கலை பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .