2021 மே 10, திங்கட்கிழமை

வெளிநாட்டு வைன் பக்கெற்றுகள் மீட்பு

Sudharshini   / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, டீ.எஸ்.சேனாநாயக்க வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திலிருந்து பொதிசெய்யப்பட்டிருந்த ஒருதொகை வைன் பக்கெற்றுகளை மத்திய மாகாண பிரதி மதுவரி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள் நேற்று(18) கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, ஒரு லீட்டருடைய  30 வைன் பக்கெற்றுகளும் வெளிநாட்டு குடிபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் முதன் முறையாக இவ்வாறு பொதி செய்யப்பட்ட வைன் பக்கெற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழச்சாறுகள் அடைக்கும் தொழில்நுட்பத்தில் இவை பொதி செய்யப்பட்டிருந்தாகவும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X