2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

கம்பளை கோஷ்டி மோதல்;14 பேருக்கு விளக்க மறியல்

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

கம்பளை, கீரப்பனை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரு கோஷ்டிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்ல் 14 பேரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இன்று புதன்கிழமை கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐந்து முக்கிய சந்தேக நபர்களைத் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணைகள் கம்பளை பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--