Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஷரபாத் அமீர்)
மாத்தளை திக்வெல்லைப் பகுதியில் சுமார் 15 வருடங்களாக சட்டவிரோதமாக நீர் இணைப்பை பெற்ற ஐஸ் உற்பத்தி நிலையமொன்றை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை ஊழியர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஐஸ் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 700 வரையிலான ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் பகிர்ந்தளிக்கப்படும் நீர் குழாய் மூலம் இந்த ஐஸ் கட்டி நிலையத்திற்கு சட்டவிரோதமாக நீரிணைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட சுற்றிவளைப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சரத் முனசிங்க தெரிவித்தார்.
இந்த ஐஸ் உற்பத்தி நிலைய உரிமையாளர் மாத்தறை மேலதிக மாவட்ட நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு 52,700 ரூபாவை நஷ்டஈடாக செலுத்தும்படியும் 10,000 ரூபாவை நீதிமன்ற அபராதமாக செலுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றிவளைப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சரத் முனசிங்க மொரட்டுவை நீரிவழங்கல் வடிகாலமைப்புச்சபை பராமரிப்பு பிரிவைச் சேர்ந்த கிருஷாந்த பெரேரா, எம்.ஐ.ஜே.பிரணாந்து, சிந்தக பிரசாத் சமந்த மென்டிஸ், லலித் துஷ்யந்த, ரொசான் குயின்டஸ் ஆகியோரே இந்த திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இந்த அதிகாரிகள் இது தொடர்பான அறிக்கையை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று 18ஆம் திகதி அமைச்சு அலுவலகத்தில் வைத்து கையளித்தனர். அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த அதிகாரிகள் பணியை பாராட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
59 minute ago