2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)   
 
மத்திய மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் பரவலாக வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் முஸ்லிம் கலாசார உத்தியோகஸ்தர்களை நியமிக்க மத்திய மாகாண சபை முன்வந்துள்ளது.

மத்திய மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளை மிட்டமிடுவது, நடத்துவது போன்ற விடயங்களில் அடிக்கடி சிக்கல்கள் ஏற்படுவதாக மத்திய மாகாண சபை அங்கத்தவர் ரிஸ்வி பாருக் மாகாண சபையில் தெரிவித்த முறைப் பாட்டை அடுத்து முதலமைச்சர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி அக்குறணை, தெல்தோட்டை, உடுநுவர, கலேவல, உக்குவலை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் முஸ்லிம் கலாசார உத்தியோகஸ்தர்களை நியமிக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X