2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

’இலங்கையர் தினம்’

Editorial   / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 'இலங்கையர் தினமாக' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி   2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,'இலங்கையர் தினம்' நிகழ்ச்சித்திட்டத்தை 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு மாநகர சபை மைதானத்திலும் மற்றும் விகாரமாதேவி பூங்கா உள்ளிட்ட அப்பிரதேத்தை அண்டிய வளாகங்கள் மற்றும் பிரதான வீதிகளை உள்ளடக்கியதாக 04 வலயங்களில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்கேற்புடன் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்ச்சித்திட்டம் அனைத்து இனங்கள் மற்றும் மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்ம வகையில், அனைத்து மாவட்டங்களின் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் உணவுக் கலாச்சாங்களை உள்ளடக்கிய நிகழ்;ச்சிகள், உள்நாட்டு கைத்தொழில் கண்காட்சி மற்றும் விற்பனை, புதிய உற்பத்திகளுக்கான வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,'இலங்கையர் தினம்' நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .