2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

லிந்துலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லததால் மக்கள் அசௌகரியம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
லிந்துலை, அக்கரப்பத்தனை, டயகம, நாகசேனை ஆகிய நகரங்களில் எரிபொருள்
நிரப்பு நிலையங்கள் இல்லாத காரணத்தினால் பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

லிந்துலை நகரிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் பல வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டதால் லிந்துலை, நாகச்சேனை, ராணிவத்தை, அக்கரப்பத்தனை, மெராயா, கோல்புறுக், டயகம போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது எரிபொருள் தேவைகளுக்காக தலவாக்கலை, நானுஓயா, ஹட்டன் போன்ற நகரங்களுக்குச் சென்றே
டீசல், பெற்றோல், மண்ணெண்னை என்பனவற்றைப் பெற்று வரவேண்டி நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--