2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மகாவலி கங்கையில் நீராடிய மூவரை காணவில்லை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி பேராதனை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காணாமல் போயுள்ளனர். நேற்று மாலை முதல் கானாமல் போயுள்ள இம்மூவரையும் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் நீரில் அடித்துச் செல்லப் பட்டு மரணமடைந்திருக்கலாமென சந்தேகிக்கப் படுகிறது.

தாய், மகன், மகள் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். பேராதனைப் பொலிஸ் பிரிவில் உள்ள ஹல்ஒலுவ என்ற இடத்திலே இவர்கள் நீராடும் போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்கள்  கொழும்பை சேர்ந்தவர்களாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X