Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
பதுளை - பசறை வீதியின் பஸ் தரிப்பு நிலையமொன்றில் கைவிடப்பட்ட ஆண் குழந்தையொன்றை மீட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். புடவைத் துண்டொன்றின் மூலம் சுற்றிய நிலையிலிருந்த இந்த குழந்தைக்கு சுமார் ஒன்றரை மாத வயதிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பசறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்தே இந்த குழந்தை மீட்கப்பட்டதாகவும் அந்தக் குழந்தையை மாவட்ட வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனிமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்நிலையில், குறித்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறியதாக பொலிஸார் கூறினர். அத்துடன் அந்தக் குழந்தையை சிறுவர் இல்லமொன்றில் ஒப்படைப்பதற்காக நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த குழந்தையின் தாயைத் தேடும் பணிகளும் பசறை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
18 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
48 minute ago