2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

ரயில் மோதி பெண் பலி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம்.தாஹிர்)

பண்டாரவளை, கிணிகம ரயில் பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணோருவர் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்துகொண்டிருந்த பொடிமெனிக்கே ரயிலில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை பண்டாரவளை, கிணிகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர் பண்டாரவளை ஏதண்ட அராவ என்ற இடத்தை சேர்ந்த 52 வயதான எஸ்.எம்.பிரேமாவதி என்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்ட பொடிமெனிகே ரயில் கிணிகம பிரதேசத்தின் ஊடாக பயணித்துகொண்டிருந்த வேளை குறித்த பெண் ரயில் பாதையில் ரயில் வருவதை அறியாமல் சென்றுகொண்டிருந்ததை ரயில் சாரதி அவதானித்ததாக தெரிவிக்கின்றார். ரயில் ஹோன்களை எழுப்பிய போதும் அவர் அதனை செவிமடுக்க மறுத்துள்ளார். அவரின் சடலம் மரண விசாரணைகளின் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .