2021 மார்ச் 06, சனிக்கிழமை

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கெட்டபுலா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினரும் இ.தொ.கா.வின் உதவிச்செயலாளருமான ரமேஷ் தெரிவித்தார்.

இதற்கேற்ப பாதிக்கப்பட்ட எட்டு  குடும்பங்களுக்கு மத்திய மாகாண சமூகசேவைகள் அமைச்சின் ஊடாக தலா 10 ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டதோடு கூரைத்ததரங்களும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான இராஜதுரை, மத்திய மாகாணசபை உறுப்பினரும் இ.தொ.கா.வின் உதவிச்செயலாளருமான ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .