2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கொத்மலை நீரணை கட்டுமான பணியில் ஈடுபட்ட இளைஞர் தவறி விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தலவாக்கலை மேல் கொத்மலை நீரணை கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அணைக்கட்டிலிருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் தலவாக்கலைத் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய  ஆர்.அருள் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இளைஞர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .