Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதிவான் லலித் ஏக்கநாயக்கா உத்தரவிட்டார்.
கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி உயர்க்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா பேராதனை பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்த போது அவருக்கு இடையூறு விளைவித்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக் கழகத்தின் நான்கு பீடங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலை மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கக் கோரி அவர்கள் தரப்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் நீதிவான், கறித்த மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
3 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Mar 2026