2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பேரூந்து அன்பளிப்பு

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் நன்மை கருதி பாடசாலைக்கென பிரத்தியேக போக்குவரத்து பேரூந்து ஒன்று அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின்  பழைய மாணவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரத்தின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்பட்டது.

பேருந்தினை பாடசாலை அபிவிருத்தி சபையிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் கிருஸ்ணசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் கே.காந்தாவும் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் மற்றும் இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--