2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீதி விபத்தில் இருவர் பலி

Super User   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

மீரிகம பஸ்யால வீதியின் மாவனல்ல சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

வேகமாக வந்த காரும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்ட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டி வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயம் கார் சாரதியின் தவறின் காரணமாகவே இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அத்தனகல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .