Super User / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை துரிதமாக முடிக்க மேலதிக நீதிமன்றங்களை நிறுவுவது அத்தியாவசியமாகும் என கிராமிய அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தை சேர்ந்த ஐம்பது பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவனல்லை ஹிங்குலயில் உள்ள அமைச்சரின் பணிமனையில் நடைபெற்றது.
அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"நாட்டில் 50 வருடங்களாக தீர்வு காணப்படாத வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றைத் தீர்ப்பது காலத்தின் அவசியமாகும். வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்; கிடப்பதால் குற்றவாளி, சுத்தவாளி என்ற நிலைப்பாடு எதுவுமின்றி பலர் விளக்கமறியலில் உள்ளனர்.
இதனால் பல குடும்பங்கள் பல்வேறு வழிகளில் பாதிக்கப்படுகின்றன.நாட்டில் தற்போதுள்ள நீதிமன்றங்களில் பல காலனித்துவவாதிகளின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டவையாகும். நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு துரித தீர்ப்புக்கள் அவசியம்.
நீதித்துறை மக்களுக்காகவே உள்ளது. எனவே மக்கள் நலன் முக்கியமானதாகும்" என்றார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026